பகிர்வாகும் கவளங்கள்...


பகிர்வாகும் கவளங்கள்
எச்சில் சொட்டும்
ஈர நாக்குகளோடு
சனிக்கிழமைகள் ஏங்குகிற
அண்டங் காக்கைகள் ...!

வியர்வை வழிய
வீதிகளை
ஓடிக் கடந்து

விருந்து முடிய
வந்து விழுந்து
வயிறு நிரம்புகிற
குப்பைத் தொட்டிகள்
ஏங்குகிற
வீதித் தெரு நாய்கள்...

உயிர் குடித்து
உடல் நிமிர

பூமிக் குழி விழுந்து
பிதுங்கும்
கலப்பைக் கரங்களுக்கு
தப்பிப் பிழைக்கும்
களைத் தீவனம்
ஏங்குகிற
செம்மறி ஆட்டுக் கூட்டம்...!

வள்ளலார்களுக்கு
ஏங்கும் சில
அன்னச் சத்திரங்களும்...

எழுதியவர் : அன்புபாலா (23-Jun-11, 7:28 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 265

மேலே