அனலில் இதயம்

பலருக்கும்
தீமைகள் செய்தே பழகியவன்...
எனக்கும் இரு இதயங்கள்
நெருக்கம் ஆனதே...
நண்பனாக ஓர் இதயம...
காதலியாக ஓர் இதயம்......

காதலில் விழந்தால்
கரைந்து விடுகின்றதே கரும்பாறையும்...
காதலியின் முகம் பார்த்தே
தீமைகளும்
நெஞ்சம் விட்டு தொலைந்ததே......

தோழனின் காதலியும்
தோழியாக
என்னுடனும் பேச ஆரம்பித்தாள்...
தீமைகள்
விலகி வாழ விரும்பியதும்
சோதனை வந்ததே......

பழி ஒன்று
என் மீது விழுந்தது...
பழகிய உள்ளங்களும்
எனை வஞ்சித்ததே...
வெறுத்த மனங்கள்
எனை வசைப்பாடியே கொன்றதே......

மஞ்சள் வான் முகிலே...
மல்லிகைப்பூ விண்மீன்களே...
முழுவதும் மலராத பிறை மதியே...
நஞ்சு கலந்த நெஞ்சோடு
நல் எண்ணம் இல்லாது
பூமி வாழுய் பூதமாம் நான்......

பரந்து விரிந்த பருவதமே...
தீண்டும் தென்றல் காற்றே...
நதிக் கரையாடும் நாணல் கீற்றே...
நந்தவனப் பூக்களை
காமத்தில் களவு செய்யும்
கல் நெஞ்சு அரக்கனாம் நான்......

நான்மதில் தடுப்பில் நான் மதிக்கெட்டு
நண்பனின் காதலியை
அடைய முயன்ற பாவியாம்
என் மீது விழுந்த வழக்கு......

விசாரணை ஏதும் இல்லாமலே
வினைப் புரிந்தவன் என்றே
தண்டனை எனும் தனித்தீவில்
தள்ளி விட்டனரே தர்மசீலர்கள்......

தொட்டுப் பறிக்க வந்தக் கரங்களை
விலகென்று எச்சரித்து
முள் தைத்ததோ முட்செவ்வந்தி...
அவளைத் தான் தொடப் போகிறேனென்று
கத்தி முனையால் கத்திக் கொண்டு
கைகளைத் துளைத்தாளே......

வலிகள் தந்த கரத்தை
வலுவாகப் பிடித்தேன்...
வளையல் அணிந்த கரம் என்பதாலே
விடுதலையும் செய்தேன்......

நொருங்கிய வளையல் துண்டுகள்
அவளைக் காயம் செய்ததோ?...
வேதனையின் வேகத்தில்
கையில் அகப்பட்ட கட்டையால்
தலைச் சிதற அடித்தாளே...
தாங்காது மயக்கத்தில்
தடுமாறி நானும் விழுந்தேனே......

பொழுதும் புலர்ந்தது
கதவுகளும் திறந்தது
கண்ணீர் கலந்த கண்களோடு
கதறி வந்தவளை
கட்டித் தழுவினாள் தோழி......

என்னச் சத்தமென்று
விழிகள் திறந்தும் திறவாதும்
வெளியில் வந்தேன்...
நீயா?... நீயா?...
வியப்பில் கேள்விகள் கேட்டதும்
விளங்காது நானும் விழித்தேன்......

எவனோ?... தெரியாது பூட்டியக் கதவு
தெரிந்தேப் பூட்டியது நானென்றும்
தவறு செய்யத்தான் முயன்றேன் என்றும்
தன் நிலைமையைத் தோழியிடம்
புரியாமல் புரிந்து சொன்னாள்......

நினைவுத் திரும்பிய நிமிடங்கள்
அவள் நீதானா?... என்றேன்...
கரந்தப் பால் மாசு என்று
கதையும் காரணமும்
காமத்துக்கே துணை நின்றது......

செய்தி அறிந்து
நண்பன் எனை நம்பவில்லை...
காதலியும் எனை கைவிட்டாள்...
என்மேல் எவருக்கும்
நம்பிக்கை துளியும் இல்லை...
அந்தச் சொல்லும் அங்கில்லை......

நடந்த நிகழ்வுகளை
எடுத்துரைக்க முயன்றும் தோற்றேன்...
ஒரு முறை அல்ல
பல முறைகள் தோற்றேன்...
வாய்ப்புகள்
மறுக்கப் பட்டதுதான் உண்மை......

யாரென்று தெரியாத முகங்கள்
எனை நம்புகின்றது...
எல்லாம் தெரிந்த முகங்கள்
எனை வெறுக்கின்றது......

ஏ... வான் முகிலே
ஏ... தென்றல் காற்றே
நீங்கள் சென்று கூறுங்கள்
உண்மை என்னவென்று
உணர்த்துங்களேன்......

அனலில் கொதிக்கும்
இதயத்தின் கடைசி மூச்சு
கடலில் கரையும் முன்னே
என் கதையின்
உண்மையை உரக்க கூறுங்களே..............

கெட்டவன் எப்போதும் கெட்டவனாகவே
வாழ்வதில்லை...
அவனுக்கும் ஓர் இதயமுண்டு...
இதயத்திலும் ஈரம் உண்டு...
உணர்ந்திட மறக்காதீர்......

எழுதியவர் : இதயம் விஜய் (7-Jul-16, 12:16 pm)
பார்வை : 522

மேலே