10 செகண்ட் கதைகள் - விதி வலியது
அமெரிக்காவில் ஒரு கணவன் - மனைவி ஒற்றுமையாகத் தான் வாழ்ந்தார்கள். ஆனால் இடையே ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து விட்டார்கள்.
வெகுநாட்கள் கழித்து, அந்தக் கணவன் ஒரு திருமணத் தரகரை நாடிச் சென்றார்.
"நான் மறுமணம் செய்து கொள்ளப் போகிறேன். அதற்கு பெண் பார்க்க வேண்டும்"
"உங்கள் வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள். இந்தக் கம்ப்யூட்டரில் அதையெல்லாம் பதிவு செய்தால், தகுந்த பெண்ணைத் தேடித் தந்து விடும்" என்று தரகர் கூற,
அந்த நபர் அனைத்து தகவல்களையும் கூறத் தொடங்கினார்.இறுதியில் கம்ப்யூட்டர் தேர்ந்தெடுத்துக் கொடுத்தது, அவருடைய பழைய மனைவியை!
இது உண்மையில் நடந்த சம்பவம்!!
#தென்கச்சிகோசுவாமிநாதன்.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
