விதியா விதிப்பயனா தற்கால அவலங்கள் - - -- - - சக்கரைவாசன்
விதியா ? விதிப்பயனா ? தற்கால அவலங்கள்
***********************************************************************
பாண்டவராம் ஐம்புலற்கு பகைமையும் ஐம்புலனே
விண் அதிர வான் ஆய்ந்தும் மண் நகரத் தாங்கலையே
விண்ணிலே தேங்கிவிட நீருக்கும் வழியில்லையே
கொள்ளையடி கல்வியும் கொள்ளைவழி மருத்துவமும் !
ஒரு பள்ளி கல்விக்கும் மறு பள்ளி கலவிக்காம்
ஒரு கண்ணில் நீர் வழிய மறு கண்ணோ தீ உமிழ
ஒரு கல்லின் தெய்வநிலை மறு கல்லில் அளவை ஆக
அமைதி நிலை பக்தியும் பரவசமாய்ப் போனதுவும் !
ஒரு பங்கு சிவனுக்காகி மறு பங்கு சக்தியெனில்
ஒரு மங்கை கற்புக்காம் மறு நங்கை ஏற்புக்காம்
பாற்கடல் மாலனுக்காம் கருங்கடலோ சுனாமிக்காம்
உறும் பணம் பெறுதற்காகி பெரும் பணம் அழிவுக்காம் !
ஆர்த்துஎழ ஆண் இனமாம் அடங்குவது பெண் குணமாம்
இருப்போர்க்கு புத்தியில்லை இல்லார்க்கு கல்வியில்லை
கண்டுவிட கண்களெனில் கொண்டுவிட காமமாம்
ஒரு பாலோ குழவிக்காம் மறு பாலோ உறவுக்காம் !
திருமால் காப்பதற்காம் மறு மால் பணிகட்காம்
பொய்யே அது மெய்யாம் மேயுமதும் பொய்யேயாம்
பக்தியின் ஒரு பங்கில் யுக்தியோ சரி பங்காம்
விதித்தது அவனெனில் வாதனைக்கு உலகே ஆம் !