சிரிப்பால் அடி

சிரிப்பால் அடி

# தினமும் இரண்டுமுறை
ஏழரையைப் பார்த்தும்
இயல்பாய் ஓடுகிறது
-கடிகாரம்

# வாகனத்தின் முன்னே
உயிருக்கு ஊசலாடுகிறது
திருஷ்டி கயிறு

# நேற்று காதலித்தப்பின் கழுத்தறுப்பு
இன்று காதலிக்காவிட்டாலும் கழுத்தறுப்பு
இனி காதலென்றாலே கழுத்தறுப்பு
#எல்லாம்_என்ஜினியரிங் காதல்

# பேய்வீட்டில் மனிதன் வாழ்ந்தால்
பேய்கே அவன் பேயாகிவிடுவான்
என்பதுதானோ மனிதனின் பயம்

# ஜந்து பைசாவில
ஜந்து அப்பளம்
அதிகம் திண்றால்
அப்பறம் கொப்பளம்
#சிறுவயதின்_ஞாபகம்

# காலுக்கு கீழே கரப்பான்பூச்சி
கையிலே எடுத்தா செத்துப்போச்சு
தூக்கிப் போட்டா ஓடிப்போச்சி
#பவ்ஸ்டோரி_பக்கத்துவீட்டுப்_பையன்

எழுதியவர் : moorthi (10-Jul-16, 12:09 pm)
பார்வை : 117

மேலே