நான்
நான் ஒரு தனிமை விரும்பி-ஆனால்
தன்னடக்கம் இல்லாதவன்…!
தான் என்ற அகம்பாவம் கொண்டவன்
தலைக்கனம் அற்றவன்…!
நான் ஒரு பைதியக்காரன்-ஆனால்
மூடன் அல்ல…!
பொறுமை இல்லாதவன்-ஆனால்
பல பொறுப்புகள் கொண்டவன்…!
நான் ஒரு சோம்பேறி-ஆனால்
கோழை அல்ல…!
நான் பிழைக்கத் தெரிந்தவன்
வாழ்கையை வாழ தெரியாதவன்…!
-அ.பெரியண்ணன்