கட்சிப் பேரும் சின்னமும்

ஆம் ஆத்மி கட்சியின் கொள்கை சரியாக இருக்கலாம். அந்த கட்சியின் பெயர் தமிழர்கள் ஏற்ற்க்கொள்ளவேண்டும்.
இல்லையென்றால் ஆம் ஆத்மி என்பதன் தமிழாக்கத்தையும் அக்கட்சியின் பெயருக்குக் கீழோயோ அல்லது மேலோயோ அடைப்பு
குறிகளுக்குள் போட்டால் இந்தி ஆங்கிலம் தெரியாத தமிழர்களுக்குப் புரியும். அந்தக் கட்சியின் சின்னம் இந்திக்காரர்களுக்கு ஏற்ற
சின்னமாக இருக்கலாம். துடைப்பம் மிகவும் பயனுள்ள கருவியாக இருந்தாலும் வாக்கு கேட்க வருகிறவர்கள் துடைப்பத்தைத்
தூக்கிக் கொண்டு வந்தால் பெரும்பால தமிழ் வாக்காளர்கள் அதை ஏற்கமாட்டார்கள். கிராமப் புறங்களில் கோபம் வந்தால் “மூணும்
பிஞ்சு போயிடும்” என்று திட்டுவார்கள். அதாவது துடைப்பம், முறம், செருப்பால் அடித்துவிடுவேன் என்று அதற்குப் பொருள்.
அவ்வாறு இருக்க தமிழர்கள் அந்த துடைப்பச் சின்னத்தை ஏற்றுக்கொள்ளவேண்டுமே! வடக்கே இந்திக்கும் உருது மொழிக்கும்
நெருங்கிய தொடர்பு உண்டு. திருமண நிகழ்ச்சிகளில் (நான் இந்தித் தொடர்களிலும் இந்திப் படங்களிலும் பார்த்ததை வைத்து
இதைச் சொல்கிறேன்) மணமகன்களின் முகம் தெளிவாகத் தெரியாத அளவுக்கு நெற்றியில் இருந்து தாடைவரை தொங்கும்
பூச்சரத்தையோ மணிச்சரங்களையோ கட்டிவிடுகிறார்கள். பெண்கள் ஆண்கள் முன்பு முக்காடு போட்டு முகத்தில் பாதி அளவு
மறைத்துக் கொள்கிறார்கள். இந்த இரு பழக்கங்களும் இந்து, இசுலாம் ஆகிய இரு மதத்தினரும் கடைப்பிடிக்கின்றனர். ஆனால்
தென்னகத்தின் பெரும்பகுதியிலும் குறிப்பாக தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த பழக்கங்கள் இந்துக்களிடையே கிடையாது
. இவையெலலாம் பண்பாடு நாகரிகம் சம்பந்தப்பட்டவை. நான் எம்மதத்தையும் குறை சொல்ல்வில்லை. சில பழக்கவழக்கங்களில்
வடநாட்டவருக்கும் தென்னாட்டவருக்கும் வேறுபாடுகள் பல உள்ளன. அவ்வாறு இருக்க ஆம் ஆத்மி கட்சியின் துடைப்பம்
சின்னத்தை தமிழர்களில் எத்தனைபேர் ஏற்றுக்கொள்வார்கள் என்று தெரியவில்லை .
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
பிழைகள் இருப்பின் பின்னர் திருத்தப்படும். படம் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் இருந்து எடுக்கப்பட்டது.