சீரழிகின்ற தமிழகம்

கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றில் மற்றவர் மெச்சும்படி வாழ்ந்த தமிழ்நாடு, இன்று கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று கொடுமைகள் தலை விரிக்க சீரழிந்துக் கொண்டே வருகின்றது.

காதல் என்றப் பெயரில் கழுத்தறுப்பு நடக்கின்றது. பெண்களை காதல் வலையில் விழ வைத்து ஏமாற்றியும், வேலை வாங்கித் தருவதாய் சொல்லி ஏமாற்றியுமே சமூகம் நடைப் போடுகிறது.

இன்னும் கொடுமையாய் பெண்களை விலைக்கு விற்று விபச்சாரம் நடத்தும் தொழில் வெற்றி நடையிடுகிறது. ஏதோ ஓர் இடத்தில் நடந்த இத்தொழில் நவீன வசதிகளுடன் நடத்தப் பட்டு பெண்களின் வாழ்க்கையை அழிக்கின்றனர்.

ஆணாதிக்க சமூகத்தில் பிறந்து அவர்களின் உடல் பசிக்கு இரையாகின்றனர். தாய்மை வரம் வாங்கும் பெண்கள் தன்னையே விற்றுப் பிழைக்கும் நிலை இந்தத் தமிழகத்தில் வந்து விட்டது. வாழ வேண்டியப் பெண்கள் வாழ்க்கை இழந்து தவிக்கின்றனர்.

எளிதில் செல்ல முடியாத இடத்தில் இருந்த இந்தத் தொழில் இன்றைக்கு விரல்கள் உரசிக் கொண்டிருக்கும் இணையதளத்தில் அதுவும் தமிழகத்தில் கொடிக்கட்டி இரகசியமாய் நடந்து வருகின்றது. இதற்காக தனி நுழைவு வசதியுடன் இணையதளத்தில் பெண்களை விற்று பணம் பார்க்கின்றனர். சட்டத்தில் இடமில்லாத இந்தத் தொழில் எந்தச் சட்டத்தின் கீழ் நடக்கின்றது.

தலைநகரம் சென்னையில் இணையதளத்தில் இந்த செயல்கள் காட்டுத் தீயை விட வேகமாய் பரவிவருகிறது. ஒரு மணி, நாள் என்று விலை வைத்து விற்கின்றனர்.
நமக்கு அருகில் நின்றே மக்கள் நடமாடும் இடங்களில் நமக்கு தெரியாது நடக்கிறது.

அண்டை மாநிலத்திலிருந்து வேலைத் தேடி வருவோர், காதலனால் ஏமாற்ற பட்டு இந்தப் புதைக்குழியில் தள்ளப் படுகின்றனர்.
காமப் பேய்களின் வேட்டையில் அவர்கள் வாழ்க்கை கானலாய் போகின்றது. காட்சிப் பொருளாக விற்கப்படுகிறாள் பெண். இந்தத் தொழிலை நடத்துவது ஒருத்தர் அல்ல ஒருக் கூட்டமே இருக்கின்றது.

பெண்களின் தேகத்தை பங்காய் கூறுப்போட்டு விற்று பணத்தை இவர்கள் சம்பாதித்து சுகபோகமாய் வாழ்கின்றனர். இவர்களுக்கு மாதச் சம்பளம் கொடுத்து கொடுமைச் செய்கின்றனர். இளமையும் அழகும் இருக்கும் வரை வைத்திருந்து வருமானம் இனிமேல் வராது என்று தெரிந்ததும் விரட்டி விடப்படுகின்றனர்.

இந்தத் தொழிலில் பெற்ற பட்டத்தாலே சமூகத்திலும் நிமிர்ந்து வாழ முடியாமல் பழமைக்கே அடிமையாகும் சூழலில் விழுகிறாள். பெண்ணாய் பிறந்த இவளுக்கு எத்தனையோ பட்டங்கள் ஆனால் இந்தத் தொழிலை நடத்துபவனுக்கு மரியாதை கிடைக்கின்றது. வெட்டிய சிறகுடன் எங்குப் பறப்பது ஒருவேளை பறந்தாலும் அதே இடத்தில் விழுகின்றாளே. வாழ்க்கையோ கேள்வி குறியாகி விடுகின்றது.
பொன்னுடலாய்ப் பிறந்து கனவுகள் சுமந்து வாழ வேண்டியவள் மென்னுடல் சிதைந்து சிதையில் நின்றுக் கொண்டு எந்தப் பக்கம் நீரென்று தேடுகிறாளே...

எழுதியவர் : இதயம் விஜய் (10-Jul-16, 1:42 pm)
சேர்த்தது : இதயம் விஜய்
பார்வை : 361

மேலே