தேய்பிறையாய் என் தன்மானம்

தேய்பிறையாய் என் தன்மானம்

நான்
படித்து வாங்கிய பட்டத்தை விட,
என் வாழ்வில் வாழ்வினால் பெற்ற பட்டங்கள் அதிகம்
1 நல்லவன்
அதனால்
2ஏமாளி
3பிழைக்கத் தெரியாதவன்
4தேவைப்படாதவன் ( உதவாதவன்)

அனைத்திற்கும் ஒரே புள்ளி வருமானம்.

வருமானம் தேய தேய
தன்மானம் தன்மானம் தேய்ந்தே போய் விடுமோ!

அது தாயாக இருந்தாலும் சரி
அது தாரமாக இருந்தாலும் சரி

இதைப் புரிந்து
அழக் கூட முடியாமல் ஒரு கணத்தை இதயம்,

நான் ஒரு கோழை
இறப்பதற்கு கூட தைரியம் இல்லாத,

தன்மானம் இல்லாத கோழை

நீங்கள் எதிர்பார்க்கும்
என் வருமானம் வந்து விடும்
தேய்ந்து போன என் தன்மானம் இறந்து போய்விடும்.

வருமானம் வரும்,
வருமோ என் மானம் ,

தேய்ந்து போனதோ என் தன்மானம் என் தன்மானம் 😭😭😭😭😭😭😭💕

Mu. Ka. Shafi akthar
மு. கா. ஷாபி அக்தர்

எழுதியவர் : மு. கா. ஷாபி அக்தர் (21-Apr-24, 9:06 am)
சேர்த்தது : மு கா ஷாபி அக்தர்
பார்வை : 41

சிறந்த கவிதைகள்

மேலே