ஆக்கிவிட்டாய்

ஆக்கிவிட்டாய்.
28 / 04 / 2024

நீ தொலைவினில் இருந்தாலோ
நான் தொல்லைக்குள் ஆகிறேன்.
நீ அருகினில் வந்தாலோ
நான் அவதிக்குள் ஆகிறேன்,
நீ பக்கத்தில் அமர்ந்தாலோ
நான் பலவீனன் ஆகிறேன்
நீ பிரிந்தே சென்றாலோ
நான் பதட்டத்துக்குள் அடைகிறேன்
நீ எனக்குள் வந்துவிட்டாலோ
நான் விஸ்வரூபம் எடுக்கிறேன்.
எனக்குள் சக்தி ஊற்றோன்று
கொப்பளித்து குமுறி பிரவாகிக்கிறது.
ஒரு உத்வேக குதிரை
கட்டுக்கடங்காமல் குதிக்கிறது.
கோழையாய் இருந்த என்னை
வீரனாய் மாற்றுகிறாய்.
பாழையாய் இருந்த என்னை
பணக்காரனாய் மாற்றினாய்
மூடனாய் இருந்த என்னை
அறிஞனாய் மாற்றிவிட்டாய்
குருடனாய் இருந்த என்னை
நல்ல ரசிகனாய் ஆக்கிவிட்டாய்
ஞான சூனியமாய் இருந்த என்னை
பெருங் கவிஞனாய் ஆக்கிவிட்டாய்....!.

எழுதியவர் : ஜீவன் (மகேந்திரன்) (28-Apr-24, 12:39 pm)
சேர்த்தது : ஜீவன்
Tanglish : aakkivittai
பார்வை : 46

மேலே