உன் இதழ் சிந்தும் முதல் காதல் 555
***உன் இதழ் சிந்தும் முதல் காதல் 555 ***
என்னுயிரே...
விழிகளில் ஒரு ஏக்கம்
இதழ்களில் ஒரு தாகம்...
அலையோடு பயணம்
அன்பே உன் தரிசனம்...
படபடக்க என் இதயம்
உன் பார்வையிலே சரணம்...
அலைபாயும் நீல கடல்
கரை எழுதும் காதல் மடல்...
விளையாடலாம் வா அன்பே.....
நீ கண்ஜாடை காட்டயிலே
என் ஆண்மையும் சிறகடிக்குதே...
நீ பொய் கோபம் கொள்கையிலே
உன் பேரழகு அனைக்குதே...
மேனிசுடும் நேரத்தில்
மேகம் போட்ட தூறல்...
மேனி சிலிர்க்கும் வேளையில்
கூந்தல் வீசிய தூறல்...
கொங்கைமீது தலைசாய்க்க
கோவில் கோபுரமே.....
நீ தலைகோதும்
நிமிடத்தில் ஏது துன்பமே...
விழிமூடும் நேரத்தில்
உன் முகம் வேண்டும் ...
அன்பே அன்பே ...
உன் இதழ் சிந்தும்
முதல் காதல் நானா...
உன் இடையில்
இதழ் பதிக்க வா வா.....
*** முதல்பூ.பெ.மணி.....***