நீயாகவே நடந்து சென்றேன்
ச்சீ என்ற போதெல்லாம்
ஆடை திறக்கிறது
நம் இரவு....
------------------------------------------
கையொப்பம் மாறி இருக்க
விழி சற்று அதிகம் திறந்தாய்.
மறுமுறை புன்னைகைத்துக் கொண்டே
கையொப்பமும் இட்டு விட்டு
நீயாகவே நடந்து சென்றேன்.
-------------------------------------------------------
எனது வாசலில்
உனது மழை.
உனது வாசலில்
எனது வெயில்.
இடைவெளி எங்கும்
மேகமூட்டம்.
செய்தி வாசிக்கிறது
நம் காதல்.
-----------------------------------------------------------
அதிகாலை அள்ளி முடிந்து
ஆற்றில் இறங்குகிறாய் .
ஆகா சிறந்த ஓவியம்
கண்ட அத்தனைக்கும்.
--------------------------------------------------------------
கவிஜி