சினிமா டூயட்

மனதில் நுழைந்தாய்
மகிழம்பூ மனம் வீசுது
கனவில் நுழைந்தாய்
கலரில் கண்காட்சி தெரியுது

கண்ணில் தெரிந்தாய்
உடம்பில் மின்சாரம் பரவுது
கருத்தில் நிறைந்தாய்
கவிதை ஊற்று ஒன்று பெருகுது

entered my sight
and entered my heart
captured my life
and call me sweet heart

எதிரில் அமர விருப்பமா
சாரட்டு வண்டியில் செல்வோம்
அருகில் அமர விருப்பமா
காரில் ஊர்வலமாய் போவோம்

முன்னால் அமர விரும்பினால்
வாடகை சைக்கிளை மிதிப்போம்
பின்னால் அமர விரும்பினால்
பைக்கில் பரவசம் காண்போம்

entered my sight
and entered my heart
captured my life
and call me sweet heart

எழுதியவர் : கார்முகில் (13-Jul-16, 8:08 pm)
பார்வை : 85

மேலே