நானாக தான் இருக்க முடியும்
பூக்கள் மோதி
உடைந்த பாறாங்கல்
நானாக தான் இருக்க முடியும் ...
தென்றல் மோதி
கிழிந்த இதயம்
நானாக தான் இருக்க முடியும் ....
வானவில் பார்த்து
வரம் வாங்கிய பக்தன்
நானாக தான் இருக்க முடியும் ....
உன் பார்வை துளி அருந்தி
உயிர் வாழும் பிராணி
நானாக தான் இருக்க முடியும் ....
உனக்கு நொடிக்கு நூறு முறை
புரை எறினால் காரணம்
சத்தியம்
நானாக தான் இருக்க முடியும் ......