கவிதை100 நம்பிக்கையை செடியாய் வளர்க்கிறேன்

விளங்காத நிகழ்வுக்கெல்லாம்
கண்ணீரை பரிசாய் அளிக்கின்றேன்

முடியாத துயரத்திற்கெல்லாம்
மௌனத்தை காணிக்கையாய் தருகின்றேன்

விடியாத இரவிற்கெல்லாம்
தனிமையை தானமாய் கொடுக்கின்றேன்

தொடராத உறவிற்கெல்லாம்
பாசத்தை வேலியாய் தடுக்கின்றேன்

புரியாத வாழ்விற்கெல்லாம்
பக்தியை கவசமாய் அணிகின்றேன்

கலங்காத உள்ளத்திற்கென்றும்
நம்பிக்கையை செடியாய் வளர்க்கிறேன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (14-Jul-16, 9:04 pm)
பார்வை : 74

மேலே