பாதச் சுவடுகள் - சந்தோஷ்

கடற்கரை மணலில்
செதுக்கப்பட்ட
பாதச்சுவடுகளை
உன்னிப்பாய் கவனிக்கும்
அந்தி வானம்
ஒரளவு ஏதேனும் புரிந்துவைத்திருக்கும்..
ஒவ்வொரு பாதச்சுவட்டிலும்
ஒரு யோக்கியதை
ஓர் அயோக்கியத்தனம்
ஒரு சோகம்
ஒரு சுகம்
ஒரு பிரச்சினை
ஒரு தற்கொலைத்தேடல்
ஒரு பொழுதுப்போக்கு
ஒரு கனவு
ஒரு கலகம்
ஒரு கவிதை
ஒரு கதை
என எதுவோ ஒன்று
ஒன்றாய்
ஒன்றி பலதுமாய்
ஒன்றுமற்ற பழையதுமாய்
அந்தி வானத்திற்கு
புரிந்திருக்கும்.
பாதச் சுவடுகளை
துடைத்துக் கழுவும்
கடலையும் அதனிடம்
சொல்லியிருக்க கூடும்.
***
இரா.சந்தோஷ் குமார்.