ஆடிப் பட்டம்
ஆடி தேடி பயிரிட
ஆடிப் பட்டம் கண்டு
விதை.
பழமொழிகள் பல
ஆடியின் புகழ் பாட
பெருகி பெருக்கி
வளம் கண்டிடும்
மாதம் ஆடி.
பயிர் பச்சை
உயிர் பிச்சை
என்பது போல
ஆடியில் பயிர்கள்
விளம்பிட
தம்பதியர்கள்
பிரிந்திட
ஒரு காணல்
ஏறக்குறைவாகத் தோன்ற.
ஏன் எதற்கு இவ் முரண்பாடு
என்று நோக்க
புரிவது போலும்
புரியாதது போலும்
ஓர் இனம் அறியாத
உணர்வு எழ.
பழக்கங்கள் காரியத்தின்
பின் தொடர்பே!
ஆராய்ந்து அறிவது
சாலச் சிறந்தது
என்று கொள்வோமாக.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
