அம்மா
பூஞ்சோலையில் ஓர் பொன்வீணை
----------------------------------------------------
ஆயிரம் உறவுகள்
அன்பை கொடுத்தாலும்
தாயின் அன்பு
ஓர் தனி அன்பே
கருவறையில் சுமக்கயில்
காற்றை கூட யோசித்து
சுவாசித்தால் காரணம் எனக்கு
வலிக்குமோ என்ற பயம்
நேரம் தவறாமல் கணக்கிட்டு
உணவூட்டினால் கூடவே
அளவு கடந்த அன்பையும்
ஊட்டினால் கருவரையிலேயே
அவள் கருவரையை
கிழித்து நான் வந்த போது கூட
புன்னகையோடு வரவேற்றால்
என்னை புன்னகைக்க வைத்தாள்
கருவறையில் என்னை சுமந்தவளே
கருவறையில் விடை பெற்று
குடியேறினேன் உன்தன் மடியனையில்
இரத்ததை பாலாக்கி உணவளித்தாய்
நல்லிரவில் கூட என் தூக்கம் காக்க
உன் தூக்கத்தை கலத்தாய்
பல இரவுகள் உன் உறக்கத்தையே
மறந்து விட்டாய் தாயே
காலங்கள் ஓடின நானும் ஓடினேன்
எனக்கு முன்னால் நீ இருந்து
கல்லயும் முல்லயும் தாங்கி
என்னை காத்து வந்தாய் தாயே
நல்லறிவு வேண்டும் என்று
பள்ளிக்கு அனுப்பி வைத்தாய்
பத்து பாத்திரம் தேச்சு
நீ படும் துன்பத்த நா கண்டா
வலி தாங்க மாட்டானு தானே
உன் கரம் பற்ற வந்த போதெல்லாம்
முந்தி கொண்டு பிடிக்க வைத்தாய் விறலை
தன் வயிற்றை காயவைத்து
உணவளித்தவள் என் தாய்
பள்ளி படிப்ப முடிச்சுபுட்டு
கல்லூரி சேர காசு கேட்ட
கை காலு காதல போட்டதையெல்லாம்
விலைக்கு போட்டுதானே படிக்க வச்ச
நிலா சோறு உண்ட பலக்கம்
இது வரைக்கும் முடியல
அதுக்கு முற்றுப்புள்ளி வைக்க
சோறு ஊட்டுண கையோட
கடைசி கைபிடி சாதத்த
கண்ணு பட்டுறும்னு சுத்தி போட்டியே
அதயும் மறக்கல தாயி
குளிச்சு முடுச்சு வந்ததும்
முந்தானையில துவட்டின
சுகம் செத்தாலும் மறக்காது
வேலை தேடி அலைகயில
வெயில்ல போனா கருத்துருவனு
குழம்பு சட்டிய வித்து
வாங்கி கொடுத்தியே குடை
வேகமா நடந்து போனா
காலுதா வலிக்குமுனு
கண்ணுல பட்டதெல்லாம் வித்து
வாங்கி கொடுத்தாயே
இரு சக்கர வாகனத்த
நீ பட்ட கடன நா வந்து
அடைக்கும் முன்னே
என் கடமை ஒன்னு இருக்குனு
பண்ணி வச்சியே கல்யாணம்
கூட்டு குடும்பமா வாழ்ந்தாகா
குழப்பம் தா வருமுன்னு
தனி குடித்தனம் போடானு
அனுப்பி வச்சியே பட்டனத்துக்கு
மாதம் தவராம நீ எழுதும்
கடுதாசிக்கு தபால் காரனுக்கு
பரிசு கொடுத்து படிச்ச தாயி
உனக்கு பேரன் புள்ள
புரந்துட்டானு கடுதாசி வந்ததுமே
வந்து சேர்ந்தாயே அந்த கனமே
உன் பாசம் யாருக்கு தாயி வரும்
அந்தி மசங்குன ஒரு நாலு
ஏ மூச்சு தினருச்சு
அப்பவே நினச்ச என்ன
பெத்தவளுக்கு ஏதோ ஆச்சுனு
ஓடி வந்த உன்ன பாக்க
அதுக்கு முன்னாடியே நீ போயிட்ட
நாலு செவுறுதா நம்ம வீடு
நிரஞ்சு இருந்தது
நீ மட்டும் தூங்கிட்டு இருந்த
உன் பேரன் பக்கம் வந்து
அப்பத்தானு கூப்புட்டப்போ
எழுந்திரிக்க மாட்டியானு
ஏங்குச்சு எம்மனசு
தினமும் என்ன குளிப்பாட்டுன உன்ன
இன்னக்கி நா குளிப்பாடுன
மஞ்சள் பூசி விட்ட
மல்லிக தா வச்சு விட்ட தாயி
ராஜ அலங்காரத்துல
உன்ன தூக்கி வைக்கிர வரைக்கும்
நீ தூங்கிட்டுதா இருக்கனு நினச்ச
ஐயோ தூக்கு ராங்கலே
என்ன பெத்தவள
என்ற படியே மயங்கி விழுந்த
சுடுகாட்டுல உன்ன புதச்சப்போ
பக்கத்து இடத்த விலைக்கி வாங்குன
உன் பக்கத்துலயே நா இருக்கனுமுனு
காலங்கல் ஓடுச்சு ஆனா
உன் நியாபகமோ நிலையா நின்னுருச்சு
பொண்ணு பொறந்துருக்கானு
என் மனைவி சொன்ன போது
கண்ண துடச்சுகிட்டு சொன்ன
இது என் அம்மானு
நந்தவன தோட்டதுல
பூக்குமா அதிசய பூ
அது தப்பா போச்சு
அதிசய பூதான் பூத்துருச்சு
இந்த பிறவி என் அம்மாவாக
பூஞ்சோலையில் ஓர் பொன் வீனை
என்னை பெற்றவளே.....
பாண்டிய ராஜ்