அன்னாசிப் பழம்

அன்னாசிப் பழம் ..

கல்கத்தாவில் இருந்து கேரளா போயிருந்தேன். என் மனைவி அங்கிருந்து வரும் பொழுது ஐந்து கிலோ குத்தரிசி வாங்கிவரக் கேட்டிருந்தாள். நான் வாங்கி வரவில்லை.

காரணம் என்ன ... ?

ஒரு சமயம். கல்கத்தாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு வரவே, விலை ஏறிப்போய் இருந்தது. கேட்கும் விலை கொடுக்க முன்வந்தாலும் அரிசி கிடைப்பதில்லை.

அரிசியை வெளி இடங்களில் இருந்து கடத்தி வந்து சிலர் விற்று வந்தனர். இதை அறிந்த அரசாங்கம் ஒரு மாகாணத்தில் இருந்து மற்றொரு மாகாணத்திற்கு அரிசி எடுத்துச் செல்வதற்கு தடை உத்திரவு போட்டிருந்தார்கள்.

அவ்வாறிருந்தும், சிலர் அரிசியை ஒளித்து, மறைத்து, அதிகாரிகளை ஏமாற்றி கடத்தலில் ஈடுபட்டு வந்தனர்.

இவ்வாறு கடத்தப்படும் அரிசி பெரும்பாலும் ஹவ்ரா மற்றும் சியால்தா வழியாக கல்கத்தாவிற்கு கொண்டு வருவதுண்டு.

ஒரு நாள் .. காவலில் ஈடுபட்டிருந்த போலிஸ் அதிகாரிகள் வெளி ஊர்களில் இருந்து காய்கறி, கீரை, பழங்கள் மற்றும் பல பொருள்களை வியாபாரத்திற்கு கொண்டு வரும் ஒவ்வொரு "வென்டரையும்" பரிசோதித்துக் கொண்டிருந்தனர்.

ஒரு சிறுவன் பெரிய அலுமினிய பாத்திரத்தின் அடியில் சிறு சிறு பைகளில் அரிசியை வைத்து, அதன் மேல் பச்சை இலைகளை வைத்து, பின் அதன் மீது முருங்கைகாய்கள் வைத்திருந்தான்.
பரிசோதனைக்கு உட்பட்ட அச்சிறுவன் .... பாவம் ..... பிடிபட்டு விட்டன. ஏமாத்தவா செய்கிறாய் என்று பெங்களிகளுக்கே உரித்தாகிய அந்த கெட்ட கெட்ட வார்த்தைகளால் அவனைத் திட்டி, அடித்து, அவன் உடையைக் கழற்றி, ஒரு முருங்கைக் காயை அவன் ஆசன துவாரத்தில் ஏற்றினர். சிறுவன் அழுவான் என நினைத்த போலிஸ் அதிகாரிகளுக்கு ... அவன் கல கல என்று சிரித்தது பெரும் வியப்பை ஏற்படுத்த, அவர்கள் ஏன் சிரிக்கிறாய் என வினவினர்.

அதற்கு, அவன் அடுத்து வரும் வண்டியில் என் அண்ணன் அன்னாசிப் பழங்களை எடுத்து வருவதை நினைத்துப் பார்த்தேன் .... சிரிப்பை அடக்க முடிய வில்லை என்றதும் .... அனைவருமே சிரித்து விட்டனர்.

பச்சரிசி, புழுங்கலரிசி கொண்டு வருபவர்கள் கதி இது என்றால், கேரளாவில் இருந்து குத்தரிசி நான் வாங்கி வந்திருந்து, போலிஸ் கையில் பிடிபட்டு இருந்தால் .....என் நிலைமை என்னவாகி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்.

போலிஸ் கையால் அடி வாங்குவதை விட என் மனைவியின் திருக்கையால் ஓரிரண்டு அடிகள் கொண்டாலும் ஒருவிதத்தில் எனக்கு மகிழ்ச்சி தான் இருக்கும். என் மீது அவள் பட்டுக்கரம் பட்டால் .. காதல் அல்லவா மலரும் .....

எழுதியவர் : (17-Jul-16, 10:02 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 149

மேலே