அவளின் தேடல்

மரணத்தை விட
கொடுமையானது
நாம் நேசித்தவர்களால்
ஒதுக்கப்படுவது
அவளையும் அன்று
ஒதுக்கினார்கள்
இன்று அவள்
அநாதை என்ற
பட்டம் பெற்று
எங்கோ வெறித்தபடி
எதையோ தேடிக் கொண்டிருக்கிறாள்
மனநோயாளியாக !
அவள் செய்த
பாவம் தான் என்னவோ ?
ஒரு கயவனால் அவள்
நாசப்படுத்தப்பட்டது தான்
பாவமென்றால்
அந்த நாசவேலையை
செய்தவன் மட்டும்
ஏன்
சமூகத்தால் ஒதுக்கப்படவில்லை ?
அவனுக்கான
தண்டனை ஏன் வழங்கப்படவில்லை ?
கரணம் அவன்
ஆண் என்ற காரணம்
மட்டுமே.................!

எழுதியவர் : அன்புடன் சகி (18-Jul-16, 12:48 pm)
Tanglish : avalin thedal
பார்வை : 605

மேலே