இது ஒரு உயிரின் கதை

வலியால் துடிக்கிறேன்
விழியால் அழுகிறேன்
என் நிலை கண்டு
உதவுவார் யாரும் இன்றி
அன்று எனை சிதைத்த
கயவர்கள் இன்று
என் முன்னே திரிகிறார்கள்
ஆனாலும் வாயிருந்தும்
ஊமையாகிப் போனேன்
இந் நிலை மாறுமா ?
என்னிடம் இருந்து
பறிக்கப்பட்டதை
மீட்டுத்தர முடியுமா ?
காலம் தான் என்
கேள்விக்கு பதிலா ?
காத்திருந்து காத்திருந்து
இதோ இன்று என்
ஆன்மா உடலின்றி திரிகிறது
வழி தேடி.............!

எழுதியவர் : அன்புடன் சகி (18-Jul-16, 12:46 pm)
பார்வை : 279

மேலே