இது ஒரு ரோஜாவின் கதை

என்னை பாதுகாக்க வேண்டிய
முட்களே எனை
நாசப்படுத்தியது தான் ஏனோ ?
அழகுக்கே அழகு சேர்க்கும் என்னை
அசிங்கப்படுத்தியது தான் ஏனோ ?
என் வாசனையால் எங்கும்
மணம் வீசச் செய்த நான் ,
இன்று என் சுவாசத்தை
இழந்து தவிப்பது தான் ஏனோ ?
இது சிதைக்கப்பட்ட
ரோஜா பூவின் குமுறல் மட்டுமல்ல !
இன்னும் மலர்ந்தும் மலராத
சிறுமியின் உள்ளக் குமுறல் ..............!

எழுதியவர் : அன்புடன் சகி (18-Jul-16, 12:44 pm)
பார்வை : 313

மேலே