கிராமத்து பைங்கிளி

நேற்று முதல் நான் விண்ணில் கண்ட வெண்ணிலா
இன்று ஏனோ கருத்த அழகுடன்
இம் மண்ணில் நடந்து வர கண்டேன்

நடுக்கத்தில் ஏனோ என் கால்கள்
நின்று கொண்டது தூரத்தில்
ஆனால் துரத்துகிறது என் பார்வை அவளை

கருவிழியால் கவர்ந்தாள்
கொன்றால் எனை
ஆயுதம் இல்லாமல்

அன்னப்பறவை இனி அசையாது
அவள் பின் அழகை ஒரு முறை
கண்டால்

வெகுளியாய் பேசும் கிராமத்து
பைங்கிளி பேச்சு ஏனோ என் காதில்
கவிதையாய் கேக்கின்றது

அனைத்து வாசனை திரவியங்களும்
தோற்றது போனது அவள் மீது
வீசும் மன்வாசனை மனத்தின் முன்

மேலும் அவள் அழகை
விமர்சனம் செய்வதில் என் பேனாவும்
வெட்கப்பட்டு மூடியது கண்களை மூடியால்



வணக்கம்

எழுதியவர் : அன்னை ப்ரியன் மணிகண்டன் (18-Jul-16, 11:03 am)
பார்வை : 341

மேலே