போய்வா தோழி
கல்லூரி நுழைவாயில்.
கல்வியாளர் கூட்டம்........
கையில் நூலோடு நீ
முகவரி தெரியாது
முழுபெயர் தெரியாது
முயலவும் இல்லை நான்
கைப்பேசி அலறிய நாள்
கைகோர்த்து நம்
கள்ளமில்லாத நட்பு
கல்லூரி முடிவும்
கலங்கமிலா நட்பிற்கு
கதவடைக்கவில்லை
தொலைத் தொடர்பு வளர்ச்சி
தோள்கொடுத்து நின்றது
தோழமை வளர்வதற்கு
சோகங்களின் பறிமாற்றம்
சுகங்களின் உருரோட்டம்
சுவடுகளின் வரலாறு
தூரம் தடையில்லை
தூய நட்பிற்கு
துணையாய் நின்றது – இருந்தும்
வாழ்நாள் முழுவதும்
வரமுடியாது உறவிது – நல்ல
வாழ்க்கைதுணை வந்த பிறகு
விடைகொடுக்கிறேன்
விம்மிய மனதோடு- நீ
விரும்பிய துணையோடு
புதிய உறவோடு பூத்திடு
புண்ணகை பூக்களைச் சமைத்திடு
பூவுலகில் சிறந்திடு
புகுந்த இடமதனில்
புகழோடு வாழ்ந்திடு- வாழ்த்துகிறேன்
போய் வா தோழி!