அழகிய தமிழ் மகள்

மீன் வளர்க்க ஆரம்பித்தேன் உன் கண்களை காண
ரோஜா கூட்டத்தை வளர்த்தேன் உன் இதழ்களை ரசிக்க
நிலவொளியில் படுத்தேன் உன் முகம் பார்க்க
குழந்தைகளுடன் விளையாடினேன் உன் சிரிப்பை நினைவுகூர
நீ என்னை விட்டு பிரித்தாளும்
உன் அழகை ரசித்து கொண்டு தான் இருப்பேன் இயற்கை சாகும் வரை
உன் பிரிவை எண்ணி நான் கலங்குவதில்லை, நான் வளர்க்கும் மீன்கள் துடிதுடித்துவிடும் என்று
நீ என்னுடன் வாழ்ந்த வாழ்க்கை குறைவேயாயினும், என் மனம் வேறொர்த்தியை ஏற்கவில்லை
என்றும் கடவுளை வேண்டுவேன், அடுத்த பிறவியிலாவது உன்னுடன் நிறைவான வாழ்க்கை வாழ
உன் காதலை சுமந்தபடி வாழும் உன் அன்பு கணவன்

- அனிதா

எழுதியவர் : அனிதா (18-Jul-16, 7:31 pm)
சேர்த்தது : anithanirmal
பார்வை : 47

மேலே