கவிதை 103 பயணத்தை தொடர்கின்றேன்

இலக்கணமில்லா கவிதை படைக்கின்றேன் இருந்தாலும்
இலக்கிய ரசனை குறையவில்லை

இலக்கில்லா பயணம் தொடர்கின்றேன் இருந்தாலும்
இயன்றவரை இலக்கை அடைகின்றேன்.

இறந்தவர்களை மறக்காமல் இருக்கின்றேன் இருந்தாலும்
இருப்பவர்களை மதித்து வாழ்கின்றேன்

இல்லாமையை எண்ணி வருந்துகின்றேன் இருந்தாலும்
இருப்பவைகளை சந்தோசமாய் ஏற்றுக்கொள்கிறேன்

இழந்தவைகளை விடாமல் நினைக்கின்றேன் இருந்தாலும்
இருக்கும்வரை சாதித்து பூரிக்கின்றேன்

இயற்கையை ரசிக்காமல் இருக்கின்றேன் இருந்தாலும்
இலைகளின் சங்கீதத்தை உணர்கின்றேன்

இதயத்தை நோகச் செய்கின்றேன் இருந்தாலும்
இசையினில் மன்னிப்பு கேட்கின்றேன்

இருமாப்பை அகற்ற நினைக்கின்றேன் இருந்தாலும்
இடைவிடாது பயிற்சி செய்கின்றேன்

இல்லத்தில் மகிழ்ச்சியாய் வாழ்கின்றேன் இருந்தாலும்
இளமையை எண்ணித் தவிக்கின்றேன்

இறைவனை தினமும் வணங்குகின்றேன் இருந்தாலும்
இன்றுவரை முயற்சிகளை கைவிடவில்லை

இறைஅருள் வேண்டி உருகுகின்றேன் இருந்தாலும்
இசைவுடனே பயணத்தை தொடர்கின்றேன்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (18-Jul-16, 8:35 pm)
பார்வை : 91

மேலே