உழவன்

வெண்கதிர்கள் மண்ணில்பட்டு

விளைந்தது நெற்பயிர் கதிர்களாய்

உழவன் சிந்திய வியர்வைத்துளிகள்

நெற்கதிரின் ஓடைகளில்

ஓடியது நெல்மணிகளாய்

முன்செய்த பாவத்தால்

அடிபட்டு மிதிபட்டு

மூட்டைகளில் அடைபட்டு

எங்கெங்கோ அலைகிறது நாடோடிகளாய்

இருந்தாலும் இன்பம்தான்

ஊராரின் பசிதனை தீர்ப்பதாலே

ஓரேஓர் குறைதான் அதன்மனதில்

காத்தவன் பசி நீக்கவில்லை என்பதாலே

எழுதியவர் : கோ (18-Jul-16, 7:43 pm)
பார்வை : 63

மேலே