கொடுமை

கால் கடுக்க நின்று
கடையை திறந்ததும்
இன்று விடுமுறை..என்று..
எழுதி மாட்டிவிட்டு செல்கிறான்
நியாய விலைக்கடைக்காரன்
நடுத்தர வர்க்கத்தின் கொடுமை இது..

கையெல்லால் நடுங்குகிறது
காலெல்லால் தள்ளாட்டமிடுகிறது
மனமெல்லாம் பயத்தால் உரைகிறது
ஆனாலும் அடுத்த வேலை உணவுக்காக...
கயிறை நம்பி ஏறிவிட்ட சிறுமிக்கு
வாழ்க்கையே கொடுமைதான்...

வீடில்லாமல் வாசலில்லாமல்
நடைபாதையில் படுத்துறங்கும்
பலபேருக்கு... ஒவ்வொருவரின்
வசைபாடும் சொல்லும் கொடுமைதான்...

குடித்து குடித்து குடல்வெந்து துடிக்கும்
பலரை பார்க்கும்போது கொடுமையிலும் கொடுமைதான்

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (18-Jul-16, 5:11 pm)
Tanglish : kodumai
பார்வை : 107

மேலே