வாழ்க்கையின் தூரங்கள்
பல நாட்கள் நடந்தும் கடந்தும்
இன்னும் குறையவில்லை
வாழ்க்கையின் தூரங்கள்
மாறாத காட்சியும் நாளும்
காணும் துயரங்கள் நீட்டும்
வாழ்க்கையின் தூரங்கள்
எகிறும் தேவைகள் என்றும்
எட்டாத ஆசைகள் என்றும் ஏற்றும்
வாழ்க்கையின் தூரங்கள்
முயற்சிக்கு என்றும் பஞ்சம்
ஆசைக்கு அளவில்லை எனின் தொடரும்
வாழ்க்கையின் தூரங்கள்
தேவைக்கும் விருப்பத்திற்கும் வித்தியாசம்
தெரியவில்லை என்றால் தொலையாது
வாழ்க்கையின் தூரங்கள்
புலியை நினைத்து சூடியிட்டுக் கொள்ளும்
பூனையாக இருந்தால் தொடமுடியாத
வாழ்க்கையின் தூரங்கள்
உலகம் உள்ளங்கையில் உருளும்
நம்பிக்கை எனின் கவலையில்லை
வாழ்க்கையின் தூரங்கள்
வாழ்க்கையே உன்கையிலே
கடக்க நீ தயாரெனின் மறையும்
வாழ்க்கையின் தூரங்கள்
- செல்வா
பி.கு: கவிதைமணியில் இந்த வாரம் வந்தது