என் தளபதி நீயடா
என் தலையெழுத்துக்கு...
தலைப்பெழுத்தாய், அன்பனுன் பெயரை
அச்சுவார்க்கப்பட்டது, நம் நட்பு!!!
பல யுகங்களாக மாயப்புதைக்குழி...
மடிவிரித்த மந்திரதாலாட்டில் மசிந்து!
துன்பத்தில் துயிலடைந்த என்மனதை...
அகத்திணை தோண்டி சுகத்தினை...
ஆழ்நெஞ்சில் புதைக்கும் ஆயுதம் நீயடா!!!
என்மனதில் பதியப்பட்ட எழுத்துக்களை...
நானறியாமலிருக்க!
எண்ணஏடுகளைப்புரட்டி! வசந்தத்தை...
வண்ணச்சுவடுகளாய் பதித்தாய்!!!
ஏககறைகள் படிந்து என்மனம்
களங்கப்பட்டாலும்...
வேகமெடுத்து வெளுத்து வெண்மையாய்
மாட்டும் சலவைக்காரன் நீயடா!!!
தேரையாய் மனம் தாவினாலும்...
இறுதியில் தேங்கிநிற்பது நுன்நட்பு தானடா!
நெஞ்சத்தில் பட்டி அமைத்து...
முட்டி மோதுகிறது உன் நினைவுகள்!
எனது முகமாறுதல்களை மூடிமறைத்தாலும்,
நாடிஜோதிடம் பார்த்து நலம் விசாரிக்கும்...
முகஜோதிடக்காரன் நீயடா!
தோல்விக்குப்பின் தோழ் கொடுப்பதைவிட...
தோல்விக்குமுன் வெற்றியைஈட்ட,
முழுஉடலையும் கொடுத்தாய்! உயிரை
கொடுத்து நட்பை கைமாற்றாய் வாங்கியாயிற்றே!
என்னுள் உண்டாகும் நோய்களும் விச்சித்திரம்...
நிறைந்தது! தோற்றமென்பது இங்கேயென்றாலும்!
சீற்றமானது உன்னெஞ்சத்தில்!
நோய்வாய்ப்படுவதென்னமோ நானோ!
நொடிக்கொருமுறை நோகுவது நீயடா!
எனது உடலசைவுகள் என்னமோ!
ஹார்மோன்களின்படி என்றாலும்! அவற்றை...
மேற்பார்வையிட என்றும் தேவைநுன் கட்டுமானம்!
இதயவூடகத்திலே! நம்நட்பிற்கு வதந்தியென...
பெயரிட்டேன்! ஆதலால் எக்கணமும்...
வலம்வருகிறது தலைப்புச் செய்தியாய்!
உன்பெயரே என் உரமாகிறது! உடலுக்கு...
அன்பின் வரமாகிறது! நுன்பெயரை மட்டும்தான்...
உச்சரித்தேன்!
உச்சிக்குளிர்ந்து! முனைமகிழ்ந்து! எழுதுகோல்...
புன்னகைத்து கொட்டிய முத்துக்கள் இவ்வரிகளடா!
என் நெஞ்சத்தை குத்தகைக்கு எடுத்த...
உறவுகளில், நெஞ்சில் குத்திநின்ற உறவு...
உன்நட்பு!!! உறவே உனைப்பிரியும் வேளையில்,
கண்கள் கண்மாயாகின்றன!
கண்மாயில் திராவகங்கள் நீர்க்கின்றன!
ஏழேழு ஜென்மமெடுத்தாலும்....
என்றும் எனக்கதிபதியும்,
என் தளபதியும் நீயடா!!!