இடைவெளி இல்லா இறுக்கம்

இடைவெளி இல்லா இறுக்கம்

இடைவெளி இல்லா இறுக்கம்

======================

இரு உடல்களே இறுக்கிக்கொள்ளத் தான்

பூவை வண்டு ருசிக்கத்தான்
நீ எனை அள்ளத்தான்
நான் உனை கிள்ளத்தான்
நீ எனை வெல்லத்தான்
அத்தான்

பெண்ணின் உடலில்
ஆர்மோன்கள் அதிகம்
அதற்கு காரணம் ஆண்கள்
என் ஆர்மோன்கள்
ஆர்பரிக்கும் உன்னால்
என் மன்னா
தமிழ் வெண்பா
அமுதென்வாய்
தர வா
உன் திருவாயால்

ஆக்ஸிஜனை
அடை
உடலின் தேக வெப்பம் குறையட்டும்
உடை
மடை

உதிரத்தின் நிறம்
மரணத்தின் நிறம்

அகத்தின் நிறம்
உன் நிறம்

தேகத்தின் நிலா
தெய்வத்தின் உலா

தமிழ் பாமாலை
சூடிடும் கனா
என் உடலை
சூடிடும் கண்ணாளா


ஏறுவது ஏணி
இறங்குவது ஏணி
இடையினில்
ஏறினேன்
இறங்கினேன்
என்பது வெறும்
போலி
நாம் என்பதே நிஜம்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (21-Jul-16, 9:25 am)
பார்வை : 169

மேலே