தூரல் ஓய்ந்து

தூரல் ஓய்ந்து
துளிர் மிளிரும் நேரம்
மூன்றாம் இருக்கையில்
நான் சன்னலோரம் ...
பேருந்தும் ரதமாக
அவளைச் சுமந்து இதமாக
எதிரெதிர் பேருந்து
சில்லென்ற மழைக்காற்று
மழைச் சாரல் உடல் தழுவ
இதழ் கடித்து முகம் சுளித்தாள்
மாய்ந்து போனேன் அவளில்...
அவளழகில் மழையழகை மறந்தேன்
விழி இணைத்தாள் என்னோடு
ஒரு நொடியை விட குறைவு தான்
ஆகினும் ...
சந்திப்பே பிரிவாய் அமையும்
இந்த உறவும் கூட
இன்றுவரை
அழகானது தான்....

எழுதியவர் : விஜயகுமார் ஜெயராமன் (21-Jul-16, 12:22 pm)
Tanglish : thuural oynthu
பார்வை : 110

மேலே