பூவிதழில் புன்னகை ஏந்தி

வானத்தை வசந்தமாக்கியது
------------ஓர் இளவேனில் தென்றல்
வானத்திரையை வண்ண வரிகளால்
------------ஓவியமாக்கியது ஓர் அழகிய வானவில்
இன்னும் ஏதோ குறையொன்று இருக்கிறதே
-------------என்று நான் யோசித்தேன்
பூவிதழில் புன்னகை ஏந்தி
-------------வானவில் ஓவியமாய் நீ வருகை புரிந்தாய்
இயற்கையின் எழில் இங்கே முழுமையானது !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Jul-16, 9:12 am)
பார்வை : 1198

மேலே