ஏன் நல்லதையே நினைக்கணும், பேசணும்-னா
நம்மை சுற்றி எப்போதும் இருக்கும் ஒரு தேவதை.
வீடுகளில் நம்மை சுற்றி எப்போதும் ஒரு தேவதை இருந்து கொண்டே இருக்கிறது.
நாம் எதைச் சொன்னாலும் அப்படியே ஆகட்டும் என்ற அந்த தேவதை ஆசீர்வதித்துக் கொண்டே இருக்கும்.
நாம் பேசுவது, சொல்வது, நல்ல வார்தைகளாகவும், மங்கள வாக்காகவும் இருந்தால் அந்த தேவதையும், அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்கும். எனவே எல்லாம் நல்லதாகவே அமையும்.
ஏதாவது ஒருபொருள் இருக்கிறதா என்று கணவன் கேட்டால் இல்லையே என்று மனைவி சொல்லக்கூடாது.
நிறைய இருந்தது மறுபடியும் வாங்கவேண்டும் என்பது போல் சொன்னால் தேவதையும் அப்படியே ஆகட்டும் என்று ஆசீர்வதிக்குமாம்.
வீட்டில் எந்த பொருளும் எப்போதும் நிறைந்திருக்கும். வீடு எப்போதும் மங்களகர -மாகவே இருக்கும். எனவே பேசும்போது நல்ல வார்த்தையாக அனைவரும் பேசுவோம்