நிலைகொள் மனமே
நிலைகொள் மனமே......
யாவும் இங்கே நிலை இல்லையென
மாற்றத்தின் பிறப்பும்
மனிதாபிமானத்தின் இறப்பும்
நேர்கோட்டில் பயணிக்கும்
எதார்த்த வாழ்க்கையின் பயணிகள்...
இனத்தின் செழிப்பும்
இரக்கத்தின் ஈவும்
கதைகளில் கலந்த கற்பனை
வளத்தில் உதிர்க்கும்
சொல்லின் செல்வங்கள்......
ஆதலால்
மனமே....நிலைகொள்...
நீயும், யாவும் இங்கே நிலை இல்லையென.......
பலர் தேவைகளை புதைத்து
தன் தேவை தேடும் தேவையோ
சூரியன் தின்று வென்மதியிடம்
வெகுமதி தேடும்
இருளின் இரவல்கள்......
பொறுமை கலந்த பொதுவுடமை
இங்கே புதைக்கப்பட்ட பூமியின்
மீது நடப்பட்ட செடியில்
பூக்கும் மலர்கள்......
ஆதலால்
மனமே......நிலைகொள்.....
நீயும், நானும், யாவும் இங்கே நிலை இல்லையென......
சொந்தங்களின் வேதனைகள்
தன் சொந்தமாகிவிடாமல்
பார்க்கும் நெஞ்சங்கள்
ஆலயத்தில் இடம் கிடைத்தும்
ஏற்றப்படாத மெழுகுவர்திகள்.....
பொய்யின் அர்த்தம்
பலரின் அகராதில்
மெய்யின் எதிர்சொல்லாக
மட்டுமே மாறிவிட்ட உண்மை......
ஆதலால்
மனமே......நிலைகொள்.....
யாவும் இங்கே நிலை இல்லையென......
பூமியின் புரிதல்கள் புதுமையானவை.....
நீ புதியதை தேடு.....
யாவும் இங்கே நிலை இல்லையென்ற நிலையோடு......

