கனவு
இமைகளை உடைத்து
உறக்கத்தை கிழித்து
உள்ளூர போகும் பயணம்
உறங்கும் ஜடத்தின்
பிண்டம் கடந்த
புது வழி பயணம்
இறந்தவர் இருப்பதாவும்
இருப்பர் இறப்பதாகவும்
மாயைகள் நிறைந்த புதினம்
கனவு என்பது
நம்மை கடத்தி
தன்னை வளர்க்கும்
உறக்க மிருகம்