நனைவேன் என் நட்பில்
எண்ணம் நான்கு என தூண்கள் அமைத்தால் போதும் குடில் அமைக்க...
நான் பெற்ற நட்பின் பிடியால் கைக்கொண்டதோ பதினைந்து, நினைப்பின் கோட்டையே..
தாய், தந்தை என்பார் மூத்தோர், அதையும் பின்தள்ளி என் உயிர்க்கும் அப்பாற்பட்ட நேசம் தந்த கரங்கள்..
மரணம் உண்டாகினும் நட்பின் மடி தேடும் மனம்..
நான் குணமுள்ளவனா அல்ல தரம் தாழந்தவனா என்ற எண்ணம் மேலோங்கிய கணம், மனமுரைத்த சொல், உன்கை குறையிருப்பின் உயிர் தரும் நட்பு கைகொள்ளாது..
எதுவும் இல்லை செல்வம்..
எல்லாம் கைகூடும் என் நட்பால்...
நட்பே உனை கைவிடேன்