என்னுள் எண்ணங்கள் - என் நண்பன்

சொற்றொடர்களின் வாக்கியமானவே!
எண்ணங்கள் என்னுள் ஆயிரம் தான் - நின்றவை
என்னவோ வலி என்னும் மிட்சங்களின் மீதிதான்,
எச்சங்களின் மீதி என்றஉணர்வின் மீதினூடே நான் - வழிதடுமாறி
சுயம் என்சொல்லை மறந்திட்ட பதறாகி தடுமாறிட, தடம்மாறிட
இருளின் மெழுகாய்மாறி திரிஎனும் சுடரானாய்.
என்னை என்னுள் உணர்ந்திடா தருணம் - என்உளம்
உணர்ந்த காணொளி கருப்பொருளாகிட்டாய் நீ ,
நான்என்ற இழுக்கொழித்திட்ட பரம்பொருளாய் - அகம்
நிறைந்திட்ட அன்பின், நட்ப்பின்முதல் இலக்கணமானாய்.
தாகபட்சியின் உளஆசை தவிப்பறிந்து வாழ்க்கை பற்றகற்றி -
இறைதந்திட்ட தாயாகி என்பசி தீர்த்தவனே,
செவிடாய்போன பாழுலகில் செவிகொணர்ந்தென்சொல் புரிந்திட
என்எண்ணம் உனதென்று உளமார உரைத்திட்டாய்,
தவழ்ந்துவிழுகின்ற மழலையாய் வாழ்வெதிர்பாரா என்னடி
பவளவாய் திறந்து ரசிக்கிறது உன்கண்ணொளி- எடுத்துவை
அடுத்தடி நானிருக்கிறேன் எதுவாகினும்உனைத்தாங்க எனசொல்லி,
நிதானித்து உரைத்திட்டாய் என்மாற்றங்களில் - எண்ணவிருட்சமாய்
அலைபாய்ந்திட்ட எண்ணங்களின் கரை உன்சொல்,
பயந்தோடும் வாழ்வின் நம்பிக்கை உன்செயல்,
வார்த்தைகள் புதிராகினும், சிந்தனை பலவாகினும்
வாழ்வே சதிராகினும் நிந்தனை நின்தோள்!
எதிர்பார்க்கிறேன் உன்னை என்வாழ்வு சிறப்பிக்க என்றஅன்றி
சிறந்திட்டோம் நண்பா பிறர்சிரம் தாழ்த்த - என்றுசொல்ல
நட்பு என்சொல்லை சிரமேற்போம் கரம்கூப்பி.
விடிந்திடும் நம்காலை இனிதாக - வரவேற்போம் ஓர்புதுநாளை
படைத்திடுவோம் புதுஉலகை நமக்காகஅன்றி தலைமுறைக்காக!
வீற்றிடுவோம் விதைகளாய் மாற்றங்களின் மரபணுக்களாய்!
வெற்றிதிருமகளின் வேட்கை புதல்வர்களாய் - வாழ்வோம்
தன்னம்பிக்கையின் ஊற்றாய்! ஏக்கங்களின் தீர்வாய்!!!

எழுதியவர் : சிவகுமார் பவானி (23-Jul-16, 2:20 am)
பார்வை : 1328

மேலே