தினம் ஒரு தத்துவ பாட்டு - 27 =172

“உண்மைகள் உறங்குகிற உலகமிது – இதில்
நன்மைகள் நடக்குறது வெகு அரிது
சத்தியம் செய்து சாட்சி சொல்லி
சட்டத்தை சவக்குழியில் தள்ளுது”

மனசாட்சியில்லா மானிடரே
பொய்சாட்சி சொல்ல துணிந்தனரே
அரசாட்சி ஆளும் ஆளுனரே
அத்தாட்சி தந்து உதவினரே

பதுக்கி பதுக்கி பாவத்தை செய்யும்
பெரிய மனுசன் தொல்லையதிகம்
ஒதுக்கி ஒதுக்கி ஊதியத்தை குறைத்து
ஒன்மேன் ஆர்மி கொள்ளையடிக்கும்

அமுக்கி அமுக்கி இருப்பதை அமுக்கி
இருக்கும் அரசுகள் சுருட்டிக்கொள்ளும்
டிமிக்கி டிமிக்கி சரியான டிமிக்கி கொடுத்து
மக்கள் காதில் ஜிமிக்கி குத்திச்செல்லும்

நிரபராதி வெளியில் இருக்க
குற்றவாளி சிறையில் இருக்க
சட்டத்தின் முன் எல்லோரும் சமமென்றால்
அரசியல் குற்றவாளிக்கு ஏன் விடுதலை..?

கீழ்கோர்ட்டில் தண்டனை பெற்றவன்
மேல்கோர்ட்டில் விடுதலை
இருகோர்ட்டிலும் ஓரே தீர்ப்பென்பதை
அரசியல்வாதிகள் விரும்பலை

ஆண்டவன் என்பவன் இருக்கின்றானாம்
அனைத்தையும் அவன் பார்க்கின்றானாம்
அரசனும் ஆண்டியும் அவனுக்கு ஒன்றுதானாம்
இருந்தும் ஆலயவழி பாட்டில் ஏன் பாகுபாடாம்?

முடிவுயெடுக்க முடியாமல் மூச்சடித்துப் போகிறது
விடிவுகாலம் பிறக்காதா வாய்பிளந்து தவிக்கிறது
வாய்ப்பளிக்க வேண்டுமாய் வாசக்கதவுகள் தட்டுகிறது
வாழ்க்கை முடிவதற்குள் போர்களமாய் இருக்கிறது.

எழுதியவர் : சாய்மாறன் (25-Jul-16, 10:28 pm)
பார்வை : 149

மேலே