மௌனம்
உன் மௌனம் அழகென்று
யார் சொல்லி வைத்தாரோ?
உன் மௌனம் திமிரென்று
யார் சொல்லி வைத்தாரோ?
உன் மௌனம் இசையென்று
யார் சொல்லி வைத்தாரோ?
உன் மௌனம் கவியென்று
யார் சொல்லி வைத்தாரோ?
யார் தான் அதை சொல்லி வைத்தாரோ?
என்னிடம் நீ
காதல் சொல்லாமல்
மௌனமாகவே இருக்கிறாய்!!
பெண்ணே,
உன் மௌனம் கூட சம்மதத்தின்அறிகுறி
நான் சொல்லி வைக்கிறேன்!!