தலை முதல் அடி வரை நான் உனக்கே உனக்கு உரியவள்

நான் இழுத்துக்
கொண்டிருக்கிறேன்
மூச்சுடன்
என் காலளவையும்
காலனவன் வருவதற்குள்
வந்துவிடு
காதலா(கணவா)

*****

இறையே உன்
திருவாயால்
எனை ஒரு முறை
அழை
உன் செவ்வாயால்
ஓர் அமுதம்
வேண்டும்
அதன் பின்
தாமதிக்கமாட்டேன்
அந்த கணமே
உன் சேவடியை
சரணடைவேன்

*****

அவர் மலர்பாதத்தில்
விழுந்து
கால்களை கட்டிக்கொண்டு
கண்ணில் ஒற்றி
முத்தமிட்டுக்கொண்டே இருந்தேன்
அவர் எனை
தொட்டு தூக்கினார்
உயிர் நின்று ஒரு நிமிடம் ஆகிறது

*****

உனை கண்ட
சந்தோஷத்திலேயே
இறந்தேன்
உனை
காணாத வருத்தத்திலேயே
இறந்தேன்

உன்னோடு வாழ
கொடுத்து வைக்காத இந்த பேதை

*****

பற்றாக்குறை
தாராளம்
இரண்டும்
என் உயிரை நிறுத்தியது

நீ இல்லா
காற்றில்லா பற்றாக்குறை
இதயம் துடிக்கா
பற்றாக்குறை
மூச்சு விட முடியவில்லை
வலி உயிர் போகிறது மாமா
நீ வந்திருந்தால்
எனக்கு வலி என்பதே
எனக்கு தெரிந்திருக்காது
என் இதயத்தில் இருந்து நீ கேட்டுக்
கொண்டிருக்கிறாய்
எனக்கு தெரியும்
நீ இங்கே தான் இருக்கிறாய்
என் கைகளை பிடித்துக் கொண்டிருக்கிறாய்
எனக்காக கண்ணீர் சிந்தாதே மாமா
நான் இருக்கும் வரை நீ அழக்கூடாது மாமா
நீ வரும் பொழுது
எனை படுக்க வைத்திருப்பார்கள்
உன்னிடம் சொல்லாமல்
போவதற்கு எனை மன்னித்துவிடு மாமா
நீ வரும் வரை தாங்காது
என்று சொல்லிவிட்டார்கள்
ஆனால் நான் உன்னிடம்
எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன்

எனை தூக்கி செல்ல
உடனே வா மாமா..... .... .



நீ வந்த
சந்தோஷத்தில்
அதிகமாக துடிக்கும் இதயம்
அலைமோதும் மூச்சுக்காற்று

ஆர்ப்பரிக்கும் உயிர்
மூச்சு முட்டுகிறது
இன்பமாக வலிக்கிறது
என் மேனி அவர்மடியில்
இந்த நொடியே இறக்க வேண்டுமென்ற எண்ணத்தில்
இன்பத்துடன்
இறைவன் கொடுத்த சிறு வலி அல்ல
தவம்
என் கணவன் மடியிலேயே இறக்க வேண்டுமென்ற
என் தவத்தின் பலனாய்
கிடைத்த வரம்

உயிர் போக போகிறது மாமா
நன்றாக
அணைத்துக்கொள்
எனை
விட்டு எங்கேயும்
போய்விடாதே
நான் கடைசி வரை
உனையே பார்த்துக்
கொண்டிருப்பேன்
என் கண்ணை விட்டு விலகிவிடாதே
அந்த நொடியே இறந்துவிடுவேன்

உன் கண்ணை
விட்டு நான் விலகவே
இல்லையேடி
அப்புறம் ஏனடி
கண் மூடினாய்

*****

உயிரே
உடலை சுமப்பது நீ
உடலை தொடுவது நீ
உடலை அழிப்பதும் நீயே

உன் உடல்
உனக்கு எல்லா உரிமையும்
உண்டு
எனை தூக்கி தின்று கொல்லு

தலை முதல் அடி வரை
நான் உனக்கே உனக்கு
உரியவள்
எதுவும் கேட்காதே
எங்கே வேண்டுமானாலும்
தொட்டுக்கொள்

நீ தழுவும் இடமெல்லாம்
என் மேனி சிலிர்க்குது
இதயத்தில் ஏதோ பண்ணுது
உயிரே
சுமந்துகொள் மடியில்
படுக்கப்போகிறேன்
~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (26-Jul-16, 9:44 am)
பார்வை : 283

மேலே