பயணங்கள் முடிவதில்லை

பயணங்கள் முடிவதில்லை........

ரயில் பயண சிநேகிதியாய்
என்னுடன் நீ வந்தாய்,
பயணம் முடிந்து
பிரிகையிலே
கண்ணீரால்
விடை தந்தாய்,
காலம் கடந்து
பார்க்கையிலே
என்னுடன்
கை கோர்த்தாய்,
இனி காலமெல்லாம்
உன்னுடன்
தொடர்ந்திடுவேன்
பயணத்தை,
எழுதிடுவேன்
தொடர் கதையாய்
நம்
வாழ்க்கை எனும்
பயணத்தை............!

எழுதியவர் : அன்புடன் சகி (26-Jul-16, 10:01 am)
பார்வை : 311

மேலே