நீயின்றி நான்
நிஜமின்றி நிழல் இல்லை
வானின்றி மழை இல்லை
சூரியனின்றி விடி இல்லை
காற்றின்றி சுவாசம் இல்லை
பனியின்றி குளிர் இல்லை
தந்தையின்றி கரு இல்லை
தாயின்றி உயிர் இல்லை - ஆனால்
நீ இன்றி நான் சுவாசிக்கிறேன்'
உன் நினைவுகளை நேசிக்கிறேன்
வறண்ட விளைநிலமாக வாடி நிற்கின்றேன்
நீ ஏன் இன்னும் அறியவில்லை
என்னுயிரே!!!!!!