காத்திருப்பும் காதலும்
அமாவாசை வந்தாலும் பௌர்ணமி வந்தாலும்
வானம் ஒன்றுதான்,
இன்பம் வந்தாலும் துன்பம் வந்தாலும்
வாழ்வு ஒன்றுதான்,
செழுமை வந்தாலும் வறுமை வந்தாலும்
உழைப்பு ஒன்றுதான்,
நீ என்னை வெறுத்தாலும் விரும்பினாலும்
என் அன்பு ஒன்றுதான்,
இதை நீ புரிந்தாலும் புரியாவிட்டாலும்
என் காத்திருப்பும் காதலும் ஒன்றுதான் .