தொடரும் உறவுகள்
மழை விட்டப்பின்னும்
இலையினில் நின்ற மழைத்துளி
மரம்விட்டு மண் வந்து சேரும்
மழைத்துளி மண் தொடும் நேரம்
மறுமுறை மழைப்போல் தோணும்
பிரிவுகள் காணும்
உறவுகள் யாவும்
இலையினில் உறங்கிய
மழைத்துளியாகும்
அவை மீண்டும் ஒருமுறை
மண் முகம் தீண்டும்
காலையில் வரைந்த
கோலங்கள் போல
அழகாய் இருக்கும்
நினைவுகள் மேலே
மாலையில் பொழிந்திட்ட
மாரியைப் போல
நினைவுகள் கலைக்க
சில நொடிப் போதும்
கலைந்திடும் நினைவுகள்
கனவாய்ப் போனால்
கவலைகள் மறந்து
கண்களும் மூடும்
ரணமாய் மாறி
ரகளைகள் செய்தால்
இரவும் பகலும்
உறவின் நினைவுகள் நீளும்