மௌனம் வேண்டாம் தோழி

விழிகளால் பேசி-
தென்றலை தூதுவிட்டோம்;
கண்கள் காணாமல் பேசி-
அலைபேசி சமிக்கையினை
தூதுவிட்டோம்;
கண்கள் கண்டு பேசும் போது
மௌனத்தை மட்டும் தூதுவிட்டாயே!!
என்ன நியாயமடி இது...

நமக்கிடையில் ஏனிந்த மௌனம்?
என் மனதில் ஏற்படும்-
சின்ன சலனம்;
எனக்கு தெரியவில்லை காரணம்;
காதலில் வரலாம் நாணம்;
பெண் பாவைக்கே கொண்ட சுபாவம்;
மௌனத்தை விடுத்தால் நாணம், காணம்..

எழுதியவர் : வசந்தகுமாரன் (27-Jul-16, 7:10 pm)
பார்வை : 253

மேலே