மறதி வரம்
மறதி ஒரு வரம்
---------------------
நினைவுகள் அழிவதில்லை என்பது உண்மைதான். மூளையில் பதிந்துபோன நினைவுகளை
மீட்டெடுக்க முடியாத நிலையில் அதனை மறதி என்கிறோம். மறதி இறைவன்
நமக்களித்த வரம். அந்த வரம் மட்டும் இல்லையென்றால் நம்மில் பலருக்கு
பைத்தியம் பிடித்து விடும். அதற்காக எல்லா மறதியும் நல்லதல்ல. சிலவற்றை
எப்போதும் மறக்கக் கூடாது. சிலவற்றை மறந்தேயாக வேண்டும். எதனை நினைக்க
வேண்டும், எதனை மறக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு
திருவள்ளுவர்கூட ஒரு இலக்கணம் வகுத்திருப்பார். நன்றி மறப்பது நன்றன்று
நன்றல்லது அன்றே மறப்பது நன்று. எனவே நல்லதை நினைப்போம் அல்லதை மறப்போம்.
- கேப்டன் யாசீன்,