இந்தியன் என்று சொல்லடா

எங்கே செல்கிறது நமது பாரதம் ..jQuery17108774606096243915_1640998845035
.இந்திய பொருளாதாரம் உயர்வதும்
உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதும்
ஒரு அரசின் கடமை மட்டும் இல்லை ....
இந்தியா என்பது மக்கள் ஆகிய ஒவ்வொருவரும்
சேர்ந்ததே.. நம் நாட்டை மீண்டும் உயர்த்த சில வழிகள்
படிங்கள்....படித்தது உண்மை எனில் அதன் படி நடங்கள்
படித்ததை பகிருங்கள் ....

1. நாள் வேண்டாம் ...வாரம் வேண்டாம் ..மாதம் ஒரு முறையாவது பிறருக்கு உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் .மாத முடிவில் என்ன ஒரு நல்ல விஷம் செய்தோம் என்பதை உற்றுநோக்குங்கள்.

2. நீங்கள் சாலையில் செல்லும் போது கஷ்டப்படுவர்களை கண்டால் ஒருவேளை உணவு அளிக்காவிடிலும் பரவாயில்லை ரூபாய் 1கு தண்ணீர் பாக்கெட் ஆவது வாங்கி கொடுங்கள்.

3.வீதிகளில் மரம் நடவிட்டாலும் பரவாயில்லை தங்கள் வீடுகளில் ஆவது இருக்கும் இடத்தில் நிழல் தரும் மரம் நடவும்.இடமே இல்லையா தொட்டியில் செடியாவது நடவும்.

4.சாலையில் வாகனத்தில் செல்லும் போது .தயவு செய்து தலை கவசம் அணியவும் ..சாலை விதி முறைகளை கட்டாயம் பின்பற்றவும் ..ஒரு நாட்டின் முக்கிய வளர்ச்சி சாலை விதிமுறைகளை பின்பற்றும் இடத்தில் தான் உள்ளது ..மற்றவர் பின்பற்றவில்லை என்று யோசிக்க வேண்டாம் நல்ல செயல் நாம் செய்வோம் ....

5.நீங்கள் செல்லும் சாலையில் எவரேனும் அடிபட்டு கிடந்தால்...பரிதாபப்பட்டு பார்த்து செல்லாதீர்கள் ..குறைந்த பட்சம் நின்று அவர் உயிரை காக்க உயிர்க்காகும் வாகனத்திற்கு தொடர்பாவது செய்யுங்கள் ...அந்த வாகனத்திற்கு வழி கொடுங்கள் .

6.உங்களுக்கு யாரேனும் சிறு உதவி செத்தால் கூட நன்றி கட்டாயம் சொல்லுங்கள் ..உங்கள் மேல் தவறே இல்லை என்றாலும் தவறு செய்தவரிடம் நீங்கள் மன்னிப்பு கேளுங்கள்
wHERE THERE IS THANKS AND SORRY THERE IS ONLY PEACE FILL THAT PLACE

7.உங்களின் அடிப்படை தேவை இல்லை, உங்களின் ஆடம்பர தேவை போக மீதம் உள்ளதை இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள். ஒரு நாட்டின் வளர்ச்சியின் விதை இதில்தான் விதைக்கப்படுகிறது .

8.நமது வீதியை சுத்தமாக வைக்காவிடிலும் பரவாயில்லை நமது வீட்டையும் வீட்டை சுற்றிய இடத்தையும் எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளவும் .நமது வீட்டு குப்பை பக்கத்து வீட்டை அசுத்தம் செய்யாமல் என்றும் பார்த்துக்கொள்வோம் .

9.நம் குடும்பத்தை நேசிப்பதுபோல் நமது ஊரையும் நேசிப்போம். நேசிக்க தெரிந்த மனமே யோசிக்கவும் செய்யும். யோசிக்க தெரிந்த மனம் உள்ள இடமே உயர்வை நோக்கிச் செல்லும்.

10.பணம் என்பது பறிமாறத்துக்காக நாம் உருவாக்கியதே தவிர ..சேர்த்து சேர்த்து வைப்பதற்கு அல்ல . நாம் நாளை இப்புண்ணிய பூமியை விட்டு சென்றாலும் நமது சந்ததி இங்குதான் வாழ போகிறார்கள் என்பதை மறக்க வேண்டாம் .விதை நாம் விதைப்போம் நாம் விதைத்த விதையில் முளைத்த மரத்தில் நம் பிள்ளைகள் இளைப்பாறட்டும்.

நல்ல விஷயம் பல நாம் கேட்கின்றோம் ...பார்க்கின்றோம்...படிக்கின்றோம்...இருந்தும் ஒரு பாராட்டு ..கைத்தட்டு உடன் அவைகளை மறந்து பழைய நிலைக்கு செல்கின்றோம்

வெறி கொண்டு எழுவோம் ..இது நமது பாரதம் .....ஒரு காலத்தில் உலகமே பாரதத்தை தேடி படை எடுத்து வந்தது ....வருடம் ஆயிரம் முன்னே நமது வளர்ச்சியை கண்டு வியந்தது உலகம் . இன்று நாம் கையேந்தி நிற்கின்றோம் பிற நாடுகளிடம் ...அவைகளின் வளர்ச்சி கண்கொண்டு நமது வாய் வலிக்க பேசிவிட்டு நமது தேசத்தை மறக்கின்றோம் ...

வாழுங்கள் கொடுத்து வாழுங்கள்
நமது தேசம் உச்சம் தொடும்
இந்தியன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா
என்றும்....என்றென்றும்...

எழுதியவர் : ஜீவன் (30-Jul-16, 5:17 am)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 577

மேலே