உனது பிடியில் நான்

பார்த்தேன்......
பிறர் பிடியில் உன்னைப் பார்த்தேன்

இரசித்தேன்
உன் லீலைகளை இரசித்தேன்

விரும்பினேன்...
உன்னோடு உறவுகொள்ள விரும்பினேன்...
உறவும் கொண்டேன்...

இன்று..
என்னோடு உறவுகொள்ள
யாருமில்லை

இரவில் மட்டும் அரவணைத்த நீ..
இன்று
பகலிலும் என்
பக்கம் நிற்கின்றாய்....

உனது பிடியில் நான்
இன்பமாய் இருக்கின்றேன்
ஆனால்..

உன்னோடு எனைக்கண்ட உலகம்
எனக்கிட்டப் பெயர்

குடிகாரன்

எழுதியவர் : எ.திருச்செல்வம் (1-Aug-16, 12:56 pm)
பார்வை : 107

மேலே