பசி
பசி
என்பது ஓர்
உணர்வு தான்
ஆனால்
பணமில்லாத போது
ஏற்படும் பசி
அவமானமாகி
விடுகிறது.
விரதம்
என்பது ஓர்
தவம் தான்
ஆனால்
அதை கடைப்பிடிக்கமுடியாதபோது
ஏற்படும் தோல்வி
விரக்தியாகி விடுகிறது.
மனிதம்
என்பது ஓர்
பண்பு தான்
ஆனால்
அதை காணக்கிடைக்காதபோது
ஏற்படும் தவறு
குற்றமாகிப்போகிறது.
பசி மனிதனை அடையாளப்படுத்த,
விரதம் அவனை புனிதனாக்க,
மனிதம் அதற்கு மாற்றாக,
அவ்வளவு தான்.
இங்கு எல்லோரும் மனிதர்கள் தான்.
பசியில் இருப்பவர்கள் கெட இருக்கும் நல்லவர்கள்,
விரதம் இருப்பவர்கள் கெடாமல் இருக்கும் நல்லவர்கள்,
விரதம் இருக்க முடியாதவர்கள் கெட்டுப்போனவர்கள்.
தேவைகளுக்காக தேடுதல்களில்
துணிந்தால் மிருகங்கள்,
தேவைகளை தாங்கிக்கொண்டு உதவிகளுக்காக
காத்திருந்தால் அவர்கள் மனிதர்கள்.
மனிதர்களை மிருகங்களாக்குவது
சமூகமே.
அதைப்புரியாமல்
கெட்டவர்களையும் இறைவன் தான் படைத்தான்
என்பது சமூகத்தின் பொறுப்பற்ற சந்தர்ப்பவாதம்.
எனவே இருப்பவர்கள்
இல்லாதவர்களுக்கு உதவுங்கள்,
பசியாற, பணியாற்ற, முன்னேற.
அப்பொழுது தான் சமதர்ம சமுதாயம்
காண முடியும்.
இல்லை,
இங்கு அம்பானிகள் சிலரும்
அடிமைகள் பலரும்
பொறாமையால் புத்தன் சொன்னதை
புறக்கணிக்கத்தான்
செய்வார்கள். !